செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காப்பு கண்காணிப்பு அமைப்பு - DRISHTI
November 23 , 2025 19 days 66 0
சரக்கு இரயில் பெட்டிகளின் கதவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க DRISHTI எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அமைப்பை நிறுவ இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த அமைப்பை வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR) மற்றும் கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை (TIDF) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
போக்குவரத்தின் போது திறக்கப்பட்ட, திறந்த அல்லது சேதப்படுத்தப்பட்ட சரக்கு இரயில் பெட்டிகளின் கதவுகளை DRISHTI தானாகவே கண்டறிய முடியும்.
இது தொடர்ச்சியான கண்காணிப்புக்கு AI ஒளிப்படக் கருவிகள், உணர்வுக் கருவிகள், கணினி கண்காணிப்பு மற்றும் இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
ஏதேனும் அசாதாரண நடவடிக்கைகள் இருந்தால் இரயில்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இந்த அமைப்பு நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
இதன் முக்கிய நோக்கம் சரக்கு போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நேரடி ஆய்வுகளைக் குறைத்தல் மற்றும் இந்திய இரயில்வே முழுவதும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதாகும்.