TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கூட்ட மேலாண்மை கட்டமைப்பு

December 5 , 2025 14 hrs 0 min 21 0
  • திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் கூட்டத்தையும் வாகனங்களையும் முறையாக நிர்வகிக்க தமிழ்நாடு காவல்துறையானது முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தியது.
  • கோயில், தெருக்கள் மற்றும் கிரிவலம் வழித்தடங்களைச் சுற்றியுள்ள நூற்றுக் கணக்கான CCTV (காட்சிப் பதிவு கண்காணிப்புக் கருவிகள்) ஒளிப்படக் கருவிகளுடன் செயற்கை நுண்ணறிவு அமைப்பு இணைக்கப்பட்டது.
  • ஒரு சதுர மீட்டரில் 4–5 பேர் கூடும்போது இந்த அமைப்பானது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி, காவல்துறையினருக்குக் கூட்ட நெரிசலைத் தடுக்க உதவியது.
  • ஒவ்வொரு இடத்திலும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையில் 95% துல்லியமான தரவை இந்தத் தொழில்நுட்பம் காட்டியது.
  • தீபம் 2025’ செயலி மருத்துவ முகாம்கள், அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்கள்), உணவு விநியோக இடங்கள் மற்றும் அவசரத் தொடர்புகள் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர்ந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்