செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கூட்ட மேலாண்மை கட்டமைப்பு
December 5 , 2025 14 hrs 0 min 34 0
திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் கூட்டத்தையும் வாகனங்களையும் முறையாக நிர்வகிக்க தமிழ்நாடு காவல்துறையானது முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தியது.
கோயில், தெருக்கள் மற்றும் கிரிவலம் வழித்தடங்களைச் சுற்றியுள்ள நூற்றுக் கணக்கான CCTV (காட்சிப் பதிவு கண்காணிப்புக் கருவிகள்) ஒளிப்படக் கருவிகளுடன் செயற்கை நுண்ணறிவு அமைப்பு இணைக்கப்பட்டது.
ஒரு சதுர மீட்டரில் 4–5 பேர் கூடும்போது இந்த அமைப்பானது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி, காவல்துறையினருக்குக் கூட்ட நெரிசலைத் தடுக்க உதவியது.
ஒவ்வொரு இடத்திலும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையில் 95% துல்லியமான தரவை இந்தத் தொழில்நுட்பம் காட்டியது.
‘தீபம் 2025’ செயலி மருத்துவ முகாம்கள், அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்கள்), உணவு விநியோக இடங்கள் மற்றும் அவசரத் தொடர்புகள் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர்ந்தது.