செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மார்பக (X-கதிர்) ஊடுகதிர் ஆய்வு
February 8 , 2022 1202 days 566 0
ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு மார்பக ஊடுகதிர் (X-கதிர்) தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பமானது கோவிட்-19 பரிசோதனையில் பயன்படுத்தப்படும்.
ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஓர் ஆழ்ந்த கற்றல் அடிப்படையிலான ஒரு வழி முறையை முன்வைத்துள்ளது.
இந்த வழிமுறையானது, மார்பக ஊடுகதிர் வரைபடத்திலுள்ள அசாதாரணங்களைக் கண்டறிந்து கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு நுரையீரலையும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படாத ஒரு நுரையீரலையும் வேறுபடுத்திக் காட்டும்.