TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வனவிலங்குப் பாதுகாப்பு 2025

December 27 , 2025 7 days 40 0
  • இரயில் பாதைகளில் வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்க இந்திய இரயில்வே நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகள் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள விலங்குகளைக் கண்டறிந்து, இரயில் எஞ்சின் ஓட்டுநர்களுக்கு /லோகோ பைலட்டுகளுக்கு சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே எச்சரிக்கைகளை அனுப்புகின்றன.
  • காடு மற்றும் யானை வழித்தடப் பகுதிகளில் இரயில்களை மெதுவாக இயக்க அல்லது நிறுத்த இந்த அமைப்பு உதவுகிறது.
  • தரை அதிர்வுகள் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய ஒரு ஒலி அமைப்பு தொகுப்பு (DAS) பயன்படுத்தப்படுகிறது.
  • வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே நிர்வாகத்தின் கீழ் சுமார் 141 வழித்தட கிலோ மீட்டர்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது அதன் வலையமைப்பு முழுவதுமாக 1,122 கிலோ மீட்டருக்கு இந்த அமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்