செயற்கை நுண்ணறிவு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு அமைப்பு
October 31 , 2017 2760 days 1136 0
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயற்கை நுண்ணறிவு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இணைய தாக்குதலை தடுப்பதாகும்.
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பெரிய சவாலாக பார்க்கப்படுகின்ற அதே வேளையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பை பின்பற்றும் நிலையில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் யுக்திசார்ந்த திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த மத்திய அரசு 7 அம்ச உக்தியை சமீபத்தில் வரையறுத்துள்ளது. இவைகளில் முக்கியமானவையாக மனித இயந்திர தொடர்பு, செயற்கை நுண்ணறிவு சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு வசதிகளுக்கான தேவைகளுக்கேற்றபடி தகுதியான பணியாளர் அமைப்பை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் ஏற்படும் நீதி நெறிமுறை, சட்டம் மற்றும் சமூகம் சார்ந்த விளைவுகளை ஆராய்தல், தரஅளவுகளை நிர்ணயித்து செயற்கை நுண்ணறிவை மதிப்பீடு செய்தல் போன்றவை ஆகும்.
இயந்திரநுண்ணறிவு
இயந்திர நுண்ணறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு என்பது ஏறக்குறைய மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இயற்கையான நுண்ணறிவைக் காட்டிலும் இயந்திரங்களின் புத்திக் கூர்மையான செயல்பாடாகும்.
கணினி அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவிற்கான ஆராய்ச்சி என்பது புத்திச்சாலித்தனத்தின் முகவரை ஆய்வு செய்வது எனப் பொருள்படுகிறது.
பொதுவாக செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தை எப்பொழுது மனிதன் மற்ற மனித மனங்களோடு கல்வி கற்றல் மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றானோ அப்பொழுது இயந்திரமும் அதைப் போலவே அறிவாற்றல் மிக்க விஷயங்களில் செயல்படுவது போன்று தோற்றமளித்து செயல்படவேண்டிய சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது.