ஐ.நா. பொதுச் சபை செயற்கை நுண்ணறிவு ஆளுகைக்கான இரண்டு உலகளாவிய முன்னெடுப்புகளைத் தொடங்கியது.
இவை செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச அறிவியல் குழு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த உலகளாவிய பேச்சுவார்த்தை ஆகும்.
இந்த முன்னெடுப்புகள் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு அபாயங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் அதன் நன்மைகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
உலகளாவியப் பேச்சுவார்த்தையானது செயற்கை நுண்ணறிவு தொடர்பான சவால்களைப் பற்றி விவாதிக்க அரசுகள் மற்றும் பங்குதாரர்களுக்கான ஒரு உள்ளடக்கிய UN தளமாக செயல்படும்.
ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை ஆதரிக்க அறிவியல் குழு சுயாதீனமான அறிவியல் மதிப்பீடுகளை வழங்கும்.
இந்தக் குழுவின் வருடாந்திர அறிக்கைகள் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் (ஜெனீவா) மற்றும் 2027 (நியூயார்க்) ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலகளாவிய பேச்சுவார்த்தை அமர்வுகளில் முன் வைக்கப்படும்.