செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட மின் மட்டை (Power Bat) -மைக்ரோசாப்ட்
October 16 , 2018 2470 days 826 0
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான அனில் கும்ப்ளேவின் தொழில்நுட்பத் தொடக்கமான ஸ்பெக்டகாம் தொழில்நுட்ப நிறுவனமானது (Spektcom Technologies) “மின் மட்டையை” (Power Bat) அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்மட்டையின் பட்டையில் உணர்வியுடன் கூடிய எடை குறைவான ஒட்டுப்படத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மட்டை மைக்ரோசாப்டின் அசூர் க்ளவுட் தளம், அதன் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருள்களுக்கான இணையச் சேவைகள் ஆகியவற்றின் (IOT – Internet Of Things) மூலம் இயக்கப்படுகிறது.
இது மைக்ரோசாப்டின் அசூர் ஸ்பியர் இயங்கு முறையில் செயல்படுத்தப்படுகிறது.
மட்டையின் வேகம் மற்றும் செலுத்து தரம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு வீரரின் நிகழ்நேரத் திறன் குறித்த தகவலை இந்த “மின் மட்டை” அளிக்கும்.