TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு பதிப்புரிமைக் கொள்கை

December 14 , 2025 3 days 36 0
  • தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஆனது, ஆக்கப் பூர்வமான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பதிப்புரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான இடைமுகம் குறித்த அதன் பணி ஆய்வறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டது.
  • தற்போதைய பதிப்புரிமைச் சட்டம் ஆனது செயற்கை நுண்ணறிவு தொடர்பான சவால்களுக்கு போதுமானதா என்பதை மதிப்பிடுவதற்கு எட்டு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கிறது.
  • இது உலகளாவிய அணுகுமுறைகளான முழுமையான விலக்குகள், உரை மற்றும் தரவு செயலாக்க விதிவிலக்குகள், தன்னார்வ உரிமம் மற்றும் நீட்டிக்கப்பட்ட கூட்டு உரிமம் போன்றவற்றை மதிப்பாய்வு செய்கிறது.
  • "ஒரு தேசம், ஓர் உரிமம், ஒரு கட்டணம்" எனப்படும் இயங்கலை உள்ளடக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு அணுகலுக்கான ஒரு உரிமைத் தொகை மாதிரியை இந்த ஆய்வறிக்கை முன்மொழிகிறது.
  • இந்த மாதிரியின் கீழ், AI உருவாக்க வல்லுநர்கள் சட்டப்பூர்வமாக அணுகப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் பயிற்சி பெற ஒரு முழுமையான உரிமத்தைப் பெறுகிறார்கள் அதே நேரத்தில் வணிகமயமாக்கலுக்குப் பிறகுதான் உரிமைத் தொகைகள் செலுத்தப் படுகின்றன.
  • உரிமைத் தொகை விகிதங்கள் ஆனது சேகரிப்பு மற்றும் விநியோகத்தை நிர்வகிக்கும் ஒரு மைய வழிமுறையுடன், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் நிர்ணயிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்