செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தேசியப் பூங்கா
September 30 , 2025 41 days 108 0
ஜார்க்கண்டில் உள்ள பலாமு புலிகள் வளங்காப்பகத்தின் ஒரு பகுதியான பெட்லா தேசியப் பூங்காவில் முதல் வகையான செயற்கை நுண்ணறிவில் இயக்கப்படுகின்ற இயற்கை தொடர்பு மையம் நிறுவப்பட உள்ளது.
இந்த மையம் ஆனது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள், முப்பரிமாண ஒளிப் படவியல் திரையிடல், மிகை மெய்த் தோற்றங்கள் மற்றும் உள்ளார்ந்த ஒலி உணர்வு அம்சங்கள் உள்ளிட்ட மேம்பட்டத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
இந்த மையமானது விலங்குகளின் நடமாட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடுகளை உருவகப்படுத்தி ஒரு உள்ளார்ந்த இயற்கை தொடர்பு அனுபவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பூங்காவின் கருத்துரு, "Threads of Nature" என்பதாகும்.