செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகம் முதலீடு செய்யும் 5வது நாடு
April 18 , 2023 1142 days 477 0
கடந்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கச் செய்யும் புத்தொழில் நிறுவனங்கள் பெற்ற முதலீடுகளின் அடிப்படையில் இந்தியா இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீடுகள் 3.24 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இதன் மூலம், தென் கொரியா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவை விட முன்னணியில் உள்ள நாடுகள் அமெரிக்கா, சீனா, ஐக்கியப் பேரரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவையாகும்.