மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைமையகத்தில் செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் மாதிரியைத் தொடங்கி வைத்தார்.
இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை செயற்கைக் கோள் எதிர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள நாடுகளாகும்.
இந்தியாவானது தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனையை 2019 ஆம் ஆண்டில் “சக்தி நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயரின் கீழ் நடத்தியது.