TNPSC Thervupettagam

செயற்கைக் கோள் வழி கைபேசி அழைப்பு சேவைகள் - சீனா

April 20 , 2024 13 days 97 0
  • நிலத்தில் உள்ள சமிக்ஞை கோபுர உள்கட்டமைப்புகளின் அவசியமில்லாமல், நேரடியாக திறன் பேசி அழைப்புகளை செயல்படுத்தும் திறன் கொண்ட உலகின் முதல் செயற்கைக்கோளை சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இதற்கு "வானத்துடனான நேரடி இணைப்பு" என்று பொருள்படும் வகையில்  "டியான்டோங்க்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • தகவல் தொடர்பில் இடைவெளிகளை உருவாக்குவதை விட அந்த இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பு குறித்த கருத்தாக்கம் ஆனது விவிலியக் கதையில் உள்ள பாபேல் கோபுரம் என்ற கருத்தில் இருந்து பெறப்பட்டது.
  • தற்போது 36,000 கி.மீ. தொலைவில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மூன்று செயற்கைக் கோள்களை கொண்டுள்ள டியான்டோங்க்-1 செயற்கைக்கோள் தொடர் அமைப்பானது, ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
  • ஹூவாவே டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆனது கடந்த செப்டம்பர் மாதத்தில் செயற்கைக் கோள் அழைப்பு சேவைகள் இயங்கும் வகையிலான உலகின் முதல் திறன் பேசிகளை வெளியிட்டதையடுத்து இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நன்கு பலனளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்