வானியல் வல்லுநர்கள் தங்கள் முழு வான ஊடுகதிர் ஆய்வுகளின் போது 11 புதிய செயலில் உள்ள அண்ட உட்கருவங்களைக் (AGNs) கண்டறிந்துள்ளனர்.
அதற்காக, அவர்கள் ஸ்பெக்ட்ர்-RG (SRG) விண்வெளி ஆய்வகத்தைப் பயன்படுத்தினர்.
செயலில் உள்ள அண்ட உட்கரு (AGNs) என்பது அண்டங்களின் மையங்களில் உள்ள சிறிய பகுதிகள் ஆகும்.
இது விதிவிலக்காக பெரும்பாலும் மற்ற அண்டங்களை விட மிகவும் அதிகமாக நன்கு பிரகாசிக்கின்ற, அதிக அளவிலான மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுகிறது.
இந்த செறிவுமிக்க உமிழ்வு ஆனது ஒரு மாபெரும் கருந்துளை அல்லது தீவிர நட்சத்திர உருவாக்கச் செயல்பாட்டால் பருப்பொருள் குவிவதால் எழுகிறது.
AGN ஆனது பேரண்டத்தில் மிகவும் நன்கு ஒளிர்கின்ற மற்றும் ஒரு நிலையான ஆற்றல் மூலங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் அவை அண்ட உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் முக்கியமானவையாகும்.