செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் – தமிழ்நாடு
September 9 , 2024 332 days 351 0
இந்திய நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் இது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,550 ஆக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயலில் உள்ள நிறுவனங்களில் சுமார் 68,000 பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
இந்தியாவில், 2014 ஆம் ஆண்டில் 2.58 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கையானது, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயலில் உள்ள நிறுவனங்களில் 8.83 லட்சம் பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
மேலும் உச்ச நீதிமன்ற அமர்வில் இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர்.
பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 106 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர்.