TNPSC Thervupettagam

செயல்திறன் தரக் குறியீடு (PGI) 2.0

June 22 , 2025 10 days 52 0
  • 2017 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட PGI குறியீட்டினைக் கல்வி அமைச்சகம் ஆனது 2021 ஆம் ஆண்டில் PGI 2.0 என மறுசீரமைத்தது.
  • கல்வித் துறை அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி குறிகாட்டிகளின் மிகச் சமீபத்திய ஒரு மதிப்பீட்டில் சண்டிகர், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகியவை முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றன.
  • 2021-22 ஆம் ஆண்டில் சண்டிகர் 659 மதிப்பெண்களுடன் இதில் முதலிடத்தில் இருந்தது  என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பஞ்சாப் (647.4) மற்றும் டெல்லி (636.2) உள்ளன.
  • சுமார் 761 மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் மதிப்புகளில் எந்த மாநிலமும்/ஒன்றியப் பிரதேசமும் மதிப்பெண் பெறவில்லை.
  • 521-580 என்ற நடுத்தர வரம்பில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இருந்தன.
  • மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாநிலம் மேகாலயா (417.9) ஆகும்.
  • அதற்கு சற்று மேலான ஒரு மதிப்பில் அருணாச்சலப் பிரதேசம் (461.4), மிசோரம் (464.2), நாகாலாந்து (468.6), மற்றும் பீகார் (471.9) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்