பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது, 2020-21 ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் /ஒன்றியப் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டினை (PGI) வெளியிட்டுள்ளது.
இது மாநிலம்/ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பள்ளிக் கல்வி முறையின் ஆதாரங்கள் அடிப்படையிலான விரிவான பகுப்பாய்விற்கான ஒரு தனித்துவமான குறியீடாகும்.
14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்த ஏறத்தாழ 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட இந்தியக் கல்வி முறை உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும்.
இது மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களை 1 முதல் 10 நிலைகளுள் பத்து தரங்களாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தக் குறியீட்டின் படி, 2020/21 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை தரவரிசையினை கேரளா, பஞ்சாப், சண்டிகார், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் என மொத்தம் ஏழு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் அடைந்து இருக்கின்றன.
இதில் மிக உயர்ந்த நிலையினை அடைந்ததில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியன புதிய மாநிலங்களாகும்.