செயல்பாடு மற்றும் ஆராய்ச்சியை நோக்கி பொலிவுறு நகரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (SAAR) திட்டம்
January 14 , 2022 1441 days 659 0
செயல்பாடு மற்றும் ஆராய்ச்சியை நோக்கிப் பொலிவுறு நகரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (SAAR - Smart Cities and Academia Towards Action and Research) எனும் திட்டமானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தினால் தொடங்கப்பட்டது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை இது ஆவணப் படுத்தும்.
இது ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
SAAR திட்டமானது பிரதானமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகிறது.
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனம் மற்றும் நாட்டின் பிற முதன்மையான கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஈடுபட உள்ளன.
இதில் 15 முதன்மையான கட்டிடக்கலை நிறுவனங்களும் உள்ளடங்கும்.
தொடக்கத்தில், 75 நகர்ப்புற திட்டங்களுக்கான பட்டியலை SAAR தயாரிக்க உள்ளது.
பல்வேறு பொலிவுறு நகரத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதும், மற்றும் பிரதமரின் தொகுதியாகவும் திகழும் வாரணாசி நகரம், SAAR திட்டத்தில் இணையத் தவறியது.