செயல்பாட்டில் உள்ள 27,000 தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள்
February 22 , 2023 905 days 408 0
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 1,300க்கும் மேற்பட்ட செயல்பாட்டில் உள்ள தொழில் நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன.
இதன்படி தற்போது செயல்பாட்டில் உள்ள தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையானது 25,000 முதல் 27,000 ஆக உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய தொழில் நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த ஒரு சூழல் அமைப்பாக இந்தியா தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 23க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள் இணைக்கப்பட்டதை அடுத்து, இந்தியா உலகளவில் அதிக யூனிகார்ன் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தினைப் பெற்றது.
2022-23 ஆம் ஆண்டில் இந்தியப் புத்தொழில் நிறுவனங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 24% குறைக்கப் பட்டுள்ளது.