TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2017 2757 days 1008 0
  • ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கும், ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை வழங்கத் தடை விதிக்கக் கூடாதெனவும், ஆதார் அட்டை இல்லாததால் அவர்களின் பெயர்களை பயனாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது எனவும் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
  • தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘மூத்த சகோதரன்’ என பொருள்படும் ‘அண்ணா’ என்ற வார்த்தையானது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் அகராதியின் மேம்படுத்தப்பட்ட வெளியீட்டில் இந்திய மொழிகளான , தெலுங்கு, உருது, தமிழ், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளைச் சேர்ந்த 70 வார்த்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
  • அமைச்சரவை நியமனக்குழுவானது, மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரலாக திரு.அலோக் குமார் படேரியா, ஐ.பி.எஸ் அவர்களை நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்