செய்தித்தாள்களின் எழுத்து வடிவத்தினை மாற்றுதல் - மணிப்பூர்
December 17 , 2022 869 days 413 0
மணிப்பூரில் உள்ள செய்தித்தாள்கள் நிறுவனங்களானது, தற்போது பயன்பாட்டில் உள்ள வங்க மொழி வடிவ எழுத்திற்குப் பதிலாக மைதேயி அல்லது மணிப்பூரி எழுத்து வடிவங்களை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளன.
மைதேயி எழுத்து வடிவ முறையானது முன்னொரு காலத்தில் மெய்தி ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டது என்றாலும் இந்து மதத்தின் வருகையினால் பயன்பாட்டில் இல்லாமல் ஆன பின்பு இறுதியில் வழக்கொழிந்து போனது.
இந்த எழுத்து வடிவின் முற்காலத்திய கல்வெட்டுப் பதிவானது, மைடிங்கு கியாம்பாவின் (1467-1508) உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கொய்பு கிராமத்தில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டு ஆகும்.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் வங்காள மொழி எழுத்துக்களில் பதிக்கப் பட்ட நிலையில் இந்து மதத்தின் வருகையுடன், வங்காள எழுத்துக்கள் மிகவும் பிரபலமடைந்தன.