செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கீட்டுத் திட்டத்தின் விரிவாக்கம்
August 25 , 2025 142 days 192 0
செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் ஆனது 17,082 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் அனைத்து ஊட்டங்களுடன் சேர்க்கப்பட்ட அரிசியில் தற்போது இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 ஆகிய ஊட்டங்கள் செறிவூட்டப் பட்டுள்ளது.
இந்த அரிசி ஆனது TPDS (இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு), PM POSHAN மற்றும் ICDS (ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள்) மூலம் விநியோகிக்கப்படுகிறது.
PM POSHAN திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை பள்ளி மாணவர்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட AMB (இரத்த சோகை அற்ற இந்தியா) முன்னெடுப்பு, இரத்த சோகையைக் குறைப்பதற்காக செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது.
NDDB (தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம்) ஆனது 11 மாநிலங்களில் 41,700 குழந்தைகளுக்கு 7.10 லட்சம் லிட்டர் செறிவூட்டப்பட்ட பாலை விநியோகித்துள்ளது.