செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தின் நீட்டிப்பு
October 15 , 2024 461 days 328 0
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை செறிவூட்டப்பட்ட அரிசியினை இலவசமாக வழங்கும் திட்டத்தினை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் நோக்கம் "இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வது" ஆகும்.
செறிவூட்டல் என்பது "உணவின் மீதான ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதுடன் கூடிய பொது சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் ஒரு உணவில் உள்ள அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே அதிகரிப்பது" என வரையறுக்கப் படுகிறது.
ஒரு கிலோகிராம் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து (28 மைக்ரோகிராம்-42.5 மைக்ரோ கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோகிராம்) மற்றும் வைட்டமின் B-12 (0.75-1.25 மைக்ரோகிராம்) இருக்கும்.