TNPSC Thervupettagam

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் – இரண்டாம் கட்டம்

August 17 , 2022 1077 days 536 0
  • 2024 ஆம் ஆண்டிற்குள், அரசுத் திட்டங்களின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியினை விநியோகிக்க அரசானது 2021 ஆம் ஆண்டில் இலக்கு நிர்ணயித்தது.
  • இந்த விநியோகத் திட்டத்தின் முதல் கட்டமானது 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இரண்டாம் கட்டத்தில் 52% மாவட்டங்கள் செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பெற்றன.
  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 24 மாநிலங்களைச் சேர்ந்த 151 மாவட்டங்கள் செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பெற்றன.
  • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கீட்டுத் திட்டமானது, மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்ற திட்டமாகும்.
  • இந்தியாவில் இரத்தசோகை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தினை 3 ஆண்டுகளுக்குத் தொடர (2021-22) அனுமதியானது  அளிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்