- மத்திய அரசானது முதன்முறையாக A ரக மற்றும் பொது வகை அரிசிகளுக்கான செறிவூட்டப்பட்ட அரிசியின் உட்கருவிற்கான பொதுவான அம்சங்களை (தர வரைவுகள்) வழங்கியுள்ளது.
- இந்தத் தர வரைவுகளானது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
- செறிவூட்டப்பட்ட அரிசியானது 2024 ஆம் ஆண்டுக்குள் பொது விநியோக முறை மற்றும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும்.
அரிசியினைச் செறிவூட்டலுக்கான அவசியம்
- நாட்டின் ஒவ்வொரு 2வது மகளிரும் இரத்த சோகை கொண்டவராகவும் ஒவ்வொரு 3வது குழந்தையும் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளதாக உணவு அமைச்சகம் தெரிவிக்கிறது.
- மேலும் உலகளாவியப் பட்டினிக் குறியீட்டில் ‘கடுமையான பட்டினி நிலை’ என்ற பிரிவில் இந்தியா உள்ளதோடு 107 நாடுகள் கொண்ட அப்பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது.
குறிப்பு
- பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் அதன் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க வேண்டி வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களைச் சேர்க்கும் முறையே உணவு செறிவூட்டல் என வரையறுக்கப் படுகிறது.