செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பரானா வால்ஸ் உள்ளிட்ட 16 முக்கிய பழைய நதிப் படுகைகளை அறிவியலாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர்.
பள்ளத்தாக்கு வலையமைப்புகள், ஏரிகள், ஆறுகள், செங்குத்துப் பள்ளத்தாக்குகள் மற்றும் வண்டல் படிவுகளைப் பயன்படுத்தி இந்தப் படுகைகள் அடையாளம் காணப் பட்டன.
செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பெரிய வடிகால் அமைப்புகள் புவியின் பெரிய ஆறுகளைப் போலவே சுமார் 100,000 சதுர கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்டுள்ளன.
இந்தப் பகுதிகள் பண்டைய காலத்தில் இருந்து பாயும் நீர், அரிப்பு மற்றும் வண்டல் இடம் பெயர்வு சான்றுகளைக் காட்டுகின்றன.
பெரிய நதிப் படுகைகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆறுகளால் அரிக்கப்பட்ட மொத்தப் பதிவுகளில் 42 சதவீதத்தினைக் குறிக்கின்றன இருப்பினும் அவை அந்தக் கிரகத்தின் நிலப்பரப்பில் 5% மட்டுமே உள்ளன.