செவ்வாய்க் கிரக ஆய்விற்கான பூமியின் நெருக்கமான இயற்கை ஆய்வகம்
March 17 , 2026 90 days 162 0
கனடாவின் நுனாவுட்டில் உள்ள டெவோன் தீவை, எதிர்கால செவ்வாய் கிரக பயணங்களுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர்வாழும் முறைகளைச் சோதிப்பதற்கான இயற்கை தளமாக அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது உலகின் மிகப்பெரிய மக்கள் வசிக்காத தீவாகும் என்பதோடு இது மிகக் குறைந்த வெப்ப நிலை மற்றும் தாவரங்களே இல்லாத துருவப் பாலைவனச் சூழலைக் கொண்டு உள்ளது.
இந்தத் தீவில் 20 கி.மீ அகலமுள்ள 'ஹாட்டன் விண்கல் பள்ளம்' உள்ளது என்பதோடு இது செவ்வாய்க் கிரகத்தின் பாறைகள் நிறைந்த மேற்பரப்பைப் போலவே காட்சி அளிக்கிறது.
செவ்வாய்க் கிரகத்தைப் போன்ற மண்ணில் தாவரங்கள் எவ்வாறு வளரக்கூடும் என்பதை ஆய்வு செய்ய, 'ஆர்தர் கிளார்க் செவ்வாய்க் கிரகப் பசுமை வீடு' போன்ற சோதனைகளையும் அறிவியலாளர்கள் அங்கு நடத்துகின்றனர்.
செவ்வாய்க் கிரகத்தைப் போன்ற தீவிரச் சூழலில் உயிர்கள் எவ்வாறு உயிர் வாழக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ள, பாறைகளுக்குள் வாழும் நுண்ணுயிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.