செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்று
September 16 , 2025 14 hrs 0 min 26 0
ஜெசெரோ பள்ளத்திலிருந்து சபையர் கேன்யன் எனப்படும் செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரியை அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் பூமியில் நுண்ணுயிர் செயல்பாட்டுடன் தொடர்புடைய தாதுக்களான விவியானைட் மற்றும் கிரெய்கைட் ஆகியவை உள்ளன.
இந்த தாதுக்கள் ரெடாக்ஸ் எதிர்வினைகளால் (ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்க வினைகள்) உருவாக்கப்பட்ட "leopard spots" எனப்படும் புள்ளிகள் வடிவத்தில் தோன்றுகின்றன.
ரெடாக்ஸ் பிறழ்வுகள் நுண்ணுயிரிகளால் அல்லது சில சூழல்களின் கீழ் உயிரியல் சாராத செயல்முறைகளால் ஏற்படலாம்.
உயிரியல் தோற்றம் சாத்தியமற்றுக் காணப்படுவதால் வெப்பம் அல்லது அமிலத் தன்மையின் எந்த அறிகுறிகளும் இந்தத் தாதுக்களுக்கு இல்லை.
இந்தப் பாறை மாதிரி ஒரு சாத்தியமான உயிரியல் அடையாளமாகும் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் பண்டைய காலத்தில் நுண்ணுயிர்கள் காணப்பட்டதைக் குறிக்கின்றன.