MAVEN-இன் தரவுகளைப் பயன்படுத்தும் அறிவியலாளர்கள், முதன்முறையாக செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தின் ஆழத்தில் ஸ்வான்-வுல்ஃப் விளைவைக் கவனித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சூரியப் புயலின் போது இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டது.
பாய்வு குழாய்கள் எனப்படும் காந்தப்புல அமைப்புகளுடன் மின்னூட்டம் பெற்ற துகள்கள் சுருக்கப்படுவதை ஸ்வான்-வுல்ஃப் விளைவு விவரிக்கிறது.
செவ்வாய்க் கிரகத்தில், இந்த விளைவு அயனி மண்டலத்தில் (~200 கிமீ கீழே) காணப் பட்டதுடன் அங்கு விண்வெளி வானிலை நிகழ்வுகளின் போது மின்னூட்டம் பெற்ற துகள்கள் "அழுத்தப்பட்டு" மீண்டும் விநியோகிக்கப்பட்டன.
செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் பருவநிலைப் பரிணாமத்தை சூரிய செயல்பாடு எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் நன்கு புரிந்து கொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.