செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி காணப்படும் ஒற்றை அலைகள்
January 24 , 2023 1071 days 544 0
செவ்வாய்க் கிரகத்தில் ஒற்றை அலைகள் அல்லது தனித்துவமான மின் புல ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்தியப் புவிக் காந்தவியல் நிறுவனத்தின் (IIG) வானியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
அலைத் துகள் தொடர்புகள் ஆனது, துகள்களின் ஆற்றலேற்றம், பிளாஸ்மா இழப்பு, இயக்கம் போன்றவற்றை நேரடியாகக் கட்டுப்படுத்துவதால், இந்த அலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
ஒரு கிரகத்தைச் சுற்றி காணப்படும் காந்தப் புலத்தாலான ஒரு கவசமாக பூமியானது தன்னைச் சுற்றி ஒரு காந்த மண்டலத்தைக் கொண்டுள்ளது.
செவ்வாய்க் கோளானது, அதன் மேலோட்டுக் காந்த மூலங்களிலிருந்துப் பெறப்படும் பலவீனமான காந்தப் புலத்தை மட்டுமே கொண்டுள்ளது.
இது சூரியக் காற்றுகளை செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து, ஒற்றை அலைகளை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.
ஒற்றை அலைகள் என்பது, நிலையான அலைவீச்சுக் கூறு தொடர்புகளைப் பின்பற்றச் செய்யும் தனித்துவமான மின்புல ஏற்ற இறக்கங்கள் (இருமுனை அல்லது ஒற்றை முனை) ஆகும்.