அந்தமான் தீவுகளில் உள்ள திக்லிபூரில் சமீபத்தில் ஒரு சேற்று எரிமலை வெடித்தது.
சேற்று எரிமலை என்பது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் இருந்து சேறு, நீர் மற்றும் வாயுக்கள் வெடிக்கும்போது உருவாகும் சேற்று மேடாகும்.
இது வண்டல் எரிமலை அல்லது எரிவாயு-எண்ணெய் எரிமலை என்றும் அழைக்கப் படுகிறது.
மீத்தேன் வாயு அழுத்தம் மற்றும் வண்டல் படிவுகளின் சுருக்கம் காரணமாக எண்ணெய் வயல் பகுதிகள் அல்லது வெப்ப நீரூற்று செயல்பாடு உள்ள பகுதிகளில் சேற்று எரிமலைகள் பொதுவாக உருவாகின்றன.
உலகளவில் நிலத்திலும் ஆழமற்ற கடல்களிலும் சுமார் 1,000 சேற்று எரிமலைகள் காணப் படுகின்றன.
இந்தியாவில், ஒரே சேற்று எரிமலை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பரடாங் தீவில் அமைந்துள்ளது.