TNPSC Thervupettagam

சேவைகள் உற்பத்திக் குறியீடு

July 3 , 2026 5 days 97 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை அடிப்படையில் சேவைகள் உற்பத்திக் குறியீட்டை (ISP) அறிமுகப்படுத்த உள்ளது.
  • சேவைகள் உற்பத்திக் குறியீடு (ISP) என்பது தொழில்துறைகளுக்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டைப் (IIP) போலவே, இந்தியாவின் முறையான சேவைத்துறையின் உண்மையான உற்பத்தியை அளவிடும் ஒரு மாதாந்திர உயர்-அதிர்வெண் குறியீடு ஆகும்.
  • பொருளாதாரக் கண்காணிப்பு மற்றும் கொள்கை உருவாக்கத்தை மேம்படுத்துவதற்காக, தேப்ஜானி கோஷ் தலைமையிலான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் (TAC) இது உருவாக்கப்பட்டது.
  • இந்த ISP ஆனது 2024-25 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டுள்ளது. மேலும் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) அடிப்படையிலான துறைசார் எடைகளுடன் கூடிய நிலையான எடை கொண்ட லாஸ்பியர்ஸ் தொகுதிக் குறியீட்டு முறையைப் பின்பற்றுகிறது.
  • இது சரக்கு மற்றும் சேவை வரித் (GST) தரவு, நிர்வாகத் தரவு மற்றும் இணைக்கப்பட்ட சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASISSE) ஆகியவற்றுடன், அமைப்பு சாராத் துறை, பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சந்தை அல்லாத சேவைகளைத் தவிர்த்து கணக்கிடப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்