சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASSSE) 2025
May 5 , 2025 125 days 147 0
சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASSSE) குறித்த முதல் சோதனை ஆய்வு ஆனது புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமைச்சகத்தால் நடத்தப் பட்டது.
சுமார் 500 கோடி ரூபாய்க்கும் குறைவான உற்பத்தியைக் கொண்ட சேவைத் துறை நிறுவனங்கள் இந்தப் பிரிவில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 63.03 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.
சுமார் 500 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட உற்பத்தியைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் சொத்து உரிமை (62.77 சதவீதம்), நிகர நிலையான மூலதன உருவாக்கம் (62.73 சதவீதம்), மொத்த மதிப்புக் கூட்டல் (69.47 சதவீதம்) மற்றும் மொத்த இழப்பீடு (63.17 சதவீதம்) ஆகியவற்றின் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றன.