இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) அறிவியலாளர்கள் துணியிழையிலான திரிகள் மற்றும் உலோக மேற்பரப்புகளைப் பயன்படுத்தி சைஃபோன் அடிப்படையிலான வெப்ப உப்பு நீக்க முறையை உருவாக்கினர்.
இந்த அமைப்பு ஆனது உப்பு நீரைத் தொடர்ந்து சுத்திகரிப்பதன் மூலம், வழக்கமான சூரியச் சுத்திகரிப்பு முறைகளில் காணப்படும் முக்கிய சிக்கலான உப்புப் படிமங்கள் குவிவதைத் தவிர்க்கிறது.
இந்த அமைப்பு ஆனது சூரிய அல்லது அதிக வெப்பத்தை மட்டுமே பயன்படுத்தி நீர் வெளியீட்டை அதிகரித்து, பல நிலைகளில் வெப்பத்தை மறுசுழற்சி செய்கிறது.
அலுமினியம் மற்றும் துணி போன்ற குறைந்த விலை பொருட்களிலிருந்து தயாரிக்கப் படும் இது, அதிக உப்புத் தன்மை நிறைந்த நீரை (20% உப்பு வரை) சுத்திகரிக்கிறது.