TNPSC Thervupettagam

சைனோபார்ம் தடுப்பு மருந்திற்கு அனுமதி – WHO

May 11 , 2021 1547 days 679 0
  • சைனோபார்ம் தடுப்பு மருந்தினுடைய அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பானது (WHO) சமீபத்தில்  ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஆஸ்ட்ராசெனிகா, பைசர், பயோன்டெக், ஜான்சன் &
  • ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய கோவிட்-19 தடுப்பு மருந்துகளுக்கு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது அனுமதி வழங்கியது.
  • சைனோபார்ம் தடுப்பு மருந்தானது சீனாவால் உருவாக்கப் பட்டது.
  • உலக சுகாதார அமைப்பானது ஒரு சீன தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
  • COVAX திட்டத்தில் சீனாவின் சைனோபார்ம் தடுப்பு மருந்தும் சேர்க்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவும் இது தென்படுகிறது.
  • சைனோபாம் தடுப்பு மருந்தானது 79% செயல்திறனுடையது என உலக சுகாதார  அமைப்பு கூறுகிறது.
  • சீனாவின் மற்றுமொரு பிரபலமான தடுப்பு மருந்தானது சைனோவாக் (sinovac) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்