சீனாவின் சைனோவாக் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்தினை உலகளவில் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பானது ஒப்புதல் வழங்கி உள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருந்தினை உபயோகிக்கக் கோரி உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்த மருந்தினை இரண்டு தவணைகளில் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இதற்கான கால இடைவெளியானது 2 முதல் 4 வாரங்களாகும்.
அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்ற மற்ற தடுப்பு மருந்துகள் பைசர் மற்றும் பயோன்டெக் SE, ஜான்சன் & ஜான்சன், ஆஸ்ட்ரா செனிகா மற்றும் மாடெர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் ஆகும்.