September 17 , 2025
16 hrs 0 min
28
- அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் சைர்டோடாக்டைலஸ் வனரக்சகா என்ற புதிய வகை வளைந்த கால்விரல் கொண்ட மரப் பல்லி கண்டறியப்பட்டுள்ளது.
- அசாம் வனத்துறையைக் கௌரவிக்கும் வகையில் 'வனரக்சகா' என்ற பெயரானது 'வனக் காவலர்’ என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
- இந்த இனமானது ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மாறுநிலை மண்டலமான, பரெய்ல் மலைகளில் உள்ள ஜாடிங்காவின் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் காணப் பட்டது.
- இது அசாமில் பதிவு செய்யப்பட்ட ஐந்தாவது சிர்டோடாக்டைலஸ் இனமாகும்.
Post Views:
28