சொட்டுநீர்ப் பாசனத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்கள்
March 19 , 2021 1611 days 662 0
இதன் தொடர்பான தரவுகள் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தினால் மக்களவையில் வழங்கப்பட்டது.
இதன்படி சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நிகர விவசாய நிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சொட்டு நீர்ப் (நுண்ணீர்) பாசனத்தின் கீழ் நீர்ப்பாசனம் செய்யப் படுகின்றன.
இதுமட்டுமின்றி இத்தரவுகள், 27 மாநிலங்கள் (ஒன்றியப் பிரதேசங்கள் உட்பட) 30% என்ற அளவிற்கும் குறைவான சொட்டுநீர் (நுண்ணீர்) பாசன முறையைக் கொண்டு உள்ளன எனவும், அவற்றுள் 23 மாநிலங்கள் 15% என்ற அளவிற்கும் குறைவான சொட்டுநீர் (நுண்ணீர்) பாசன முறையைக் கொண்டுள்ளன எனவும் கூறுகின்றன.