TNPSC Thervupettagam

சொத்தாகக் கருதப்படும் இணைய சங்கேதப் பணம்

October 30 , 2025 16 hrs 0 min 26 0
  • இந்தியச் சட்டத்தின் கீழ் இணைய சங்கேதப் பணம் சொத்தாகக் கருதப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இணைய சங்கேதப் பணம் அடையாளம் காணக் கூடியவை, மாற்றத்தக்கவை மற்றும் தனிப்பட்ட விசைக் குறியீடுகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று நீதிமன்றம் விளக்கியது.
  • இணைய சங்கேதப் பணங்களை மற்ற வகையான சொத்துக்களைப் போலவே சொந்தமாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க முடியும்.
  • சான்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்கும் வாசிர்எக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மீதான இணையவெளித் தாக்குதலுக்குப் பிறகு இந்த வழக்கு எழுந்தது.
  • முதலீட்டாளரின் XRP நாணயங்கள் முடக்கத்தில் திருடப்பட்ட Ethereum குறியீடுகளில் இருந்து தனித்தனியாகவே இருந்தன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
  • 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 2(47A), இணைய சங்கேதப் பணங்களை மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களாக அங்கீகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்