சமீபத்தில் ஜார்க்கண்ட்டின் சொஹ்ராய் கோவர் ஓவியம் மற்றும் தெலுங்கானாவின் டெலியா ரூமல் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
சொஹ்ராய் கோவர் ஓவியமானது பாரம்பரிய மற்றும் மரபுகளைக் கொண்ட சுவர் சித்திரக் கலையாகும்.
சுவர் சித்திரம் என்பது ஓவியக் கலைப் பணியின் எந்தவொரு வேலைப்பாடும் நேரடியாகச் சுவற்றின் மீதோ, கூரையின் மீதோ அல்லது நிரந்தர மேற்பரப்பின் மீதோ பொருத்தப் படுவதாகும்.
டெலியா ரூமல் கைத்தறிக் கலையானது இயற்கைப் பழச் சாயங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் இகாத் பாரம்பரியக் கலையைக் கொண்டுள்ளது.
இகாத் என்பது ஜவுளிகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை சாயம் பூசும் முறையாகும்.
டெலியா ரூமல்கள் அப்போதைய ஹைதராபாத் நிசாமின் அரசவையில் இருந்த இளவரசிகளினால் முகத்திரையாகவும் மத்திய ஆசியாவில் அராபியர்களினால் தலைப்பாகைத் துணியாகவும் அணியப்பட்டன.