சோகோத்ரா தீவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக என ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு மிகவும் விரிவான மனிதாபிமான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
ஏமன் நாட்டில் சோகோத்ரா தீவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையேயான உலகளாவிய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் ஆனது 10.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
மேலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடானது இந்த மக்கள்தொகையில் சுமார் 1.6 சதவீதம் பேரைப் பாதிக்கிறது.
சர்வதேச சுகாதார தரநிலைகள் 10 முதல் 14 சதவீதம் வரையிலான GAM விகிதங்களை தீவிரமானவை என வகைப்படுத்துகின்றன.
சோகோத்ரா ஆனது அதன் மிகப்பெரும் தனித்துவமான தாவரங்கள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்காகப் பெயர் பெற்ற "இந்தியப் பெருங்கடலின் கேலபோகஸ்" என்று அழைக்கப்படும் வளமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த தீவாகும்.
இது இந்தியப் பெருங்கடலில், ஏமனின் தென்கிழக்கே ஆப்பிரிக்க முனைக்கு அருகில் சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.