TNPSC Thervupettagam

சோகோத்ரா தீவில் மனிதாபிமான முன்னெடுப்பு

June 11 , 2025 2 days 18 0
  • சோகோத்ரா தீவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக என ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு மிகவும் விரிவான மனிதாபிமான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
  • ஏமன் நாட்டில் சோகோத்ரா தீவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையேயான உலகளாவிய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் ஆனது 10.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • மேலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடானது இந்த மக்கள்தொகையில் சுமார் 1.6 சதவீதம் பேரைப் பாதிக்கிறது.
  • சர்வதேச சுகாதார தரநிலைகள் 10 முதல் 14 சதவீதம் வரையிலான GAM விகிதங்களை தீவிரமானவை என வகைப்படுத்துகின்றன.
  • சோகோத்ரா ஆனது அதன் மிகப்பெரும் தனித்துவமான தாவரங்கள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்காகப் பெயர் பெற்ற "இந்தியப் பெருங்கடலின் கேலபோகஸ்" என்று அழைக்கப்படும் வளமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த தீவாகும்.
  • இது இந்தியப் பெருங்கடலில், ஏமனின் தென்கிழக்கே ஆப்பிரிக்க முனைக்கு அருகில் சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்