சோதனை மாதிரி நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை தீர்வை
April 29 , 2018 2827 days 1117 0
பெங்களூரு நகரத்தில் போக்குவரத்து மேலாண்மையை (traffic management) அதிகரிப்பதற்காக எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி டவுன்ஷிப் ஆணையத்துடன் (Electronics City Township Authority-ELCITA) கூட்டிணைந்து நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை தீர்வையின் சோதனை மாதிரியை (prototype of intelligent traffic management solution) பெங்களூரு நகரம் சோதனை செய்துள்ளது.
பெங்களூரு நகரத்தின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை நகரத்தின் போக்குவரத்து மேலாண்மை அதிகாரிகளுக்கு வழங்குவதும், பயணிகள் போக்குவரத்தின் மேலாண்மையை அதிகரிக்க உதவுவதும் இந்த தீர்வையின் நோக்கங்களாகும்.
இந்த தீர்வையானது பல்வேறு வீடியோ கேமிராக்கள் மூலம் போக்குவரத்து காட்சிகளை காணொளி பதிவு செய்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி அவற்றை செயல்முறைப்படுத்துதல் (processing using artificial intelligence) போன்றவற்றை உள்ளடக்கியது.
வாகனங்களை கண்டறிதல், போக்குவரத்து நெரிசல் மதிப்பீடு மற்றும் உண்மை நேர செயல்திறனுக்காக போக்குவரத்து டிராபிக் விளக்குகளை கட்டுப்படுத்துதல் போன்ற போக்குவரத்து மேலாண்மை பணிகளின் தானியங்கலுக்கு (Automation) இந்த தீர்வை உதவும்.