TNPSC Thervupettagam

சோமநாதர் கோவில் 2026

May 14 , 2026 16 hrs 0 min 1 0
  • குஜராத்தின் பிரபாஸ் படானில் அமைந்துள்ள சோமநாதர் கோவில், 1951 ஆம் ஆண்டு மே மாதத்தில் அக்கோவில் மீண்டும் திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டையும், 1026 ஆம் ஆண்டில் இக்கோவில் மீது நடத்தப்பட்ட முதல் படையெடுப்பின் 1000-வது ஆண்டையும் நினைவு கூர்கிறது.
  • சர்தார் வல்லபாய் படேலின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்குப் பிறகு, 1951 ஆம் ஆண்டு மே 11 அன்று இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்தக் கோவிலை முறைப்படி திறந்து வைத்தார்.
  • சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது சோமநாதர் கோவில் ஆகும்.
  • 11-ஆம் நூற்றாண்டு முதல் இக்கோவில் பலமுறை படையெடுப்புகளையும் அழிவுகளையும் சந்தித்தது (முதல் தாக்குதல் கி.பி. 1026).
  • தற்போதைய கோவில் கைலாஷ் மகாமேரு பிரசாத் கட்டடக்கலை பாணியில் கட்டப் பட்டுள்ளது.
  • சோமநாதர் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர், 2026 ஆம் ஆண்டு மே 11 அன்று 'சோமநாத் சுவாபிமான் பர்வ்' கொண்டாட்டங்களின் போது கோவிலுக்கு வருகை தந்தார்.
  • மழைநீர் சேகரிப்பு, கழிவு மறுசுழற்சி, மியாவாக்கி காடுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன்னெடுப்புகள் மூலம் இந்தியாவின் முதல் 'நிகர-பூஜ்ஜியக்' கோயில் என்ற இலக்கை சோமநாதர் கோவில் நோக்கி நகர்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்