TNPSC Thervupettagam

சோமாலிலாந்து குடியரசின் அங்கீகாரம்

December 30 , 2025 15 hrs 0 min 19 0
  • சோமாலிலாந்து குடியரசை ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு இஸ்ரேல் ஆகும்.
  • சோமாலிலாந்து என்பது ஆப்பிரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள ஒரு சுயமாக அறிவிக்கப்பட்ட நாடாகும் என்பதோடு இது 1991 ஆம் ஆண்டு முதல் சோமாலியாவின் கட்டுப்பாடு இல்லாமல் தனித்து செயல்பட்டு வருகிறது.
  • இஸ்ரேலுக்கும் சோமாலிலாந்துக்கும் இடையிலான பரஸ்பர அங்கீகாரத்தின் கூட்டு அறிவிப்பின் மூலம் இந்த அங்கீகாரம் முறைப்படுத்தப்பட்டது.
  • வேளாண்மை, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சோமாலிலாந்துடன் கூட்டுறவினை மேற்கொள்வதற்கான திட்டங்களை இஸ்ரேல் அறிவித்தது.
  • ஆனால் சோமாலியா நாடானது இந்த சோமாலிலாந்து அங்கீகாரத்தை நிராகரித்து, சோமாலிலாந்து அதன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்று கூறியது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) சோமாலியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப் படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்