TNPSC Thervupettagam

சோம்நாத் கோயில் - 1000 ஆம் ஆண்டு

January 8 , 2026 2 days 16 0
  • பிரதமர் "Somnath: 1,000 years of unbroken faith" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
  • 2026 ஆம் ஆண்டில், கி.பி 1026 ஆம் ஆண்டில் கஜினி முகமதுவால் சோம்நாத் கோயில் மீது நடைபெற்ற முதல் தாக்குதலின் 1,000 ஆண்டுகள் நிறைவடைகிறது.
  • சோம்நாத் கோயில் குஜராத்தில் வேராவல் அருகே பிரபாஸ் படானில் அமைந்துள்ளது.
  • இது பாரம்பரியமாக சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாகக் கருதப் படுகிறது.
  • கி.பி 1026 ஆம் ஆண்டின் தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கோயில் கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளில்/ஒரு மில்லினியத்தில் அழிக்கப்பட்டு பல முறை மீண்டும் கட்டமைக்கப் பட்டது என்பதோடு இது அந்த நம்பிக்கையின் மீள்தன்மை மற்றும் தொடர்ச்சியைக் குறிக்கிறது.
  • இந்தக் கோயில் சாளுக்கியர் (சோலங்கி) காலத்தில் புனரமைக்கப்பட்டது, பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் மராட்டிய ஆதரவின் கீழ் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 1951 ஆம் ஆண்டில் அதன் மறு கட்டமைப்பு தொடங்கப்பட்டு தற்போதைய கட்டமைப்பு ஆனது சாளுக்கியக் கட்டிடக் கலை பாணியில் மீண்டும் கட்டப்பட்டது.
  • சர்தார் வல்லபாய் படேல் சோமநாதத்தை தேசிய மறுமலர்ச்சியின் அடையாளமாகக் கருதியதோடு, அதன் நவீன மறுகட்டமைப்பில் முக்கியப் பங்கு வகித்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்