வறட்சியால் பாதிக்கப்பட்ட தென் அமெரிக்காவில் இருந்து சரக்கு வரத்து குறைவாக இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவில் இருந்து 100,000 டன் சோயா எண்ணெயை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.
இந்தியா பொதுவாக பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து சோயா எண்ணெயை வாங்குகிறது.
ஆனால் இந்த இரண்டு முன்னணி உற்பத்தி நாடுகளில், இந்த ஆண்டில் குறைவான அளவே சோயா உற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக, சோயா எண்ணெய் இறக்குமதிக்காக அமெரிக்காவின் உற்பத்தியாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கு வேண்டிய ஒரு கட்டாய நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது.