சோலிகாக்கள் மற்றும் எரவா ஆகியப் பழங்குடியினக் குழுக்கள் காவிரிப் படுகை மற்றும் தீபகற்ப இந்தியாவினை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் பழமையான பழங்குடியினச் சமூகங்களில் ஒன்றான சோலிகாக்கள், கர்நாடகாவின் பூர்வீகக் குடிமக்கள் என்பதோடு இவர்கள் பெரும்பாலும் சாமராஜநகர் மற்றும் மாண்டியா மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
எரவா குழுவினர் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்து அம்மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் குடியேறினர்.
இந்த சமூகத்தினரின் உணவு முறைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்யும் வகையில் புதிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது காடுகளில் இருந்து அவர்கள் பெறும் பொருட்களை உள்ளடக்கிய அவர்களின் உணவு முறை பற்றிய புதிய தகவல்களை அளிக்கிறது.
இத்தகைய உணவுகள் சோலிகாக்களின் உணவு முறையில் 25 சதவீதமும், எரவாக்களின் உணவு முறையில் 30 சதவீதமும் உள்ளன.
இன்றும், பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த மலைத்தொடர்களில் இருந்து தங்கள் உணவின் பெரும்பகுதியைப் பெறும் சோலிகா மக்களுக்கான உணவில் தேன் ஒரு முக்கியப் பகுதியாகும்.
வெவ்வேறு நிலப்பரப்புகளில் வசிப்பதால் ஒவ்வொரு சமூகத்திற்குமென 10 முதல் 12 வரையிலான பிரத்தியேகமான வன உணவுத் தாவரங்கள் உள்ளன.
மழைக்காலங்களில், தரிசு நிலங்களில் ஒரே இரவில் காளான்கள் முளைத்து வருவதால் எரவா குழுவினரின் உணவின் ஒரு பகுதியாக இது இடம் பெறுகிறது.