தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் உரையாற்றினார்.
கி.பி. 1014 முதல் 1044 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழனைக் கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தினையும் அவர் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இராஜராஜ சோழன் மற்றும் முதலாம் இராஜேந்திர சோழனுக்குப் பிரம்மாண்ட சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பேரரச தலைநகராக நிறுவி, புகழ்பெற்ற கோயிலைக் கட்டினார்.
சோழர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் துறவிகள் வரலாற்று ரீதியாக ஆதரிக்கும் தமிழ் சைவ பக்தி பாரம்பரியத்தையும் மதிப்பூட்டும் விதமாக ஆதி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது.