TNPSC Thervupettagam

சோழர் காலக் கல்வெட்டுகள் – கரூர்

August 21 , 2025 16 hrs 0 min 38 0
  • கரூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன்மலை பகுதியில் மூன்று சோழர் காலக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (1178–1218) ஆட்சிக் காலமான 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
  • இந்தத் தமிழ் கல்வெட்டுகளில் 38 வரிகள் உள்ளன.
  • எல்லைகள், கிணறு மற்றும் மரங்கள் உட்பட கோயில் பராமரிப்புக்கான நில தானங்களின் விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • மேலும் காலிங்கராயன், கச்சிராயன் மற்றும் விழுபத்ராயன் போன்ற சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • ஒரு காளை மற்றும் மனிதர்களின் சிற்பங்களும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மனிதப் பலியைக் குறிக்கும் அடையாளங்களுடன் கூடியதாக உள்ளதால் பழமையானதாக கருதப்படுகிறது.
  • இந்த மலையானது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவின் சித்தலவாய் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்